பஞ்சாப்பின் சிங்கம் லாலா லஜபதி ராய் பிறந்த தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட 'பஞ்சாப் சிங்கம்" லாலா லஜபதி ராய் அவர்கள் 1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார்.

இவர் சுதேசி இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் போராடினார். இவர் சுதந்திரப் போராட்டத்தின் லால்-பால்-பால் (லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்) என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர் ஆவார். 

 இவர் யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா, சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளார். 1928ஆம் ஆண்டு லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜபதி ராய், 'என் மீது விழுந்த அடிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்" என்று கூறினார். இவர் 1928ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Freedom fighter Lala Lajapathi Roy birthday


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->