பஞ்சாப் : இந்திய எல்லையில் கண்டெடுக்கப்பட்ட  4 சீன துப்பாக்கிகள்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியை எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாத்து வருகின்றனர். இந்த எல்லை பகுதியில் சில ஆண்டுகளாகவே ட்ரோன் மூலம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் அருகே டிரோன் மூலம் இந்தியாவுக்குள் கடத்தப்பட இருந்த நான்கு சீன துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோனை உஞ்சா தக்கலாவில் எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி கைப்பற்றினர். டிரோனில் இருந்து வந்த நான்கு சீன துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்திய எல்லையில் சீன துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதால் எல்லை பாதுகாப்பு படையினர் டிரோன் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four chinese gun found in indian border


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->