அதிகாரிகளுக்கு காலணி மாலையை அணிவிக்க வேண்டும் - சர்ச்சையை கிளப்பிய முன்னாள் அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


அதிகாரிகளுக்கு காலணி மாலையை அணிவிக்க வேண்டும் - சர்ச்சையை கிளப்பிய முன்னாள் அமைச்சர்.!

பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர், முன்னாள் அமைச்சரும் தற்போது சட்டமன்ற உறுப்பினருமானவர் சுதாகர் சிங். இவர் கைமூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிசான் மகா பஞ்சாயத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "அதிகாரி ஒருவர் தனது வேலையைச் செய்யாவிட்டால் அவரது முகத்தில் எச்சில் துப்ப வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு பணிந்தால் மாநில அரசால் ஏன் பணிய முடியாது?.

அதிகாரிகளுக்கு பூமாலைகள் அல்லாமல் காலணிகளை மாலையாக அணிவிக்க வேண்டும்" என்று பேசியுள்ளார். மேலும், அவர் பீகாரில் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக ஒருவர் மட்டுமே ஆட்சியில் இருப்பதாக மாநிலத்தின் முதல்வர் நிதிஷ்குமாரையும் சாடியுள்ளார். 

ஆளும் கூட்டணியில் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர், மாநில அரசை விமர்சித்து பேசியிருப்பது, அம்மாநிலத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. சுதாகர் சிங்கின் இந்த பேச்சு பீகார் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

former minister sudhagar singh speach against bihar govt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->