வரலாற்றில் முதல் முறை ..உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா! - Seithipunal
Seithipunal


சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.

 முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் மொத்தம் 5 சிக்சர்கள் விளாசிய அபிஷேக் சர்மா 2 சிக்சர்கள் அடித்திருந்தபோது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 சிக்சர்கள் மைல்கல்லை எட்டினார். இந்த 50 சிக்சர்களை வெறும் 331 பந்துகளில் அடித்துள்ளார்.இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.

:1. அபிஷேக் சர்மா - 331 பந்துகள்,2. எவின் லூவிஸ் - 366 பந்துகள்,3. ஆந்த்ரே ரசல் - 409 பந்துகள்4. ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாயி - 492 பந்துகள்,5. சூர்யகுமார் யாதவ் - 510 பந்துகள் என அந்த பட்டியலில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

For the first time in history Abhishek Sharma has set a world record


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->