பயணிகளைத் தவிக்கவிட்டு சிங்கப்பூருக்குச் சென்ற விமானம்.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் இருந்து சிங்கப்பூர் நாட்டிற்குச் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் என்ற விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முப்பத்தைந்து பயணிகளை விமனநிலையத்திலேயே விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. நேற்று இரவு 7.55 மணிக்கு அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து  புறப்படவிருந்த இந்த விமானம், மூன்று மணிக்கே புறப்பட்டது. 

இதனால் கோபமடைந்த பயணிகள் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். 

அந்த புகாரின்படி, விமான நிலைய அதிகாரிகள், ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள், விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது குறித்து மின்னஞ்சல் வழியாக பயணிகளுக்கு தகவல் அளித்ததாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து, விமான நிலைய அதிகாரி தெரிவித்ததாவது, "ஒரே குழுவைச் சேர்ந்த சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பயணசீட்டுகளை முன்பதிவு செய்த முகவர் ஒருவர் விமான நேரம் மாற்றம் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை. 

விமானத்தின் மாற்றப்பட்ட நேரத்திற்கு வந்த பயணிகளுடன் மட்டும் அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது" என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம்  தொடர்பாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையமும் விளக்கம் அளிக்குமாறு டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flight leaves thirty five passangers in amirtsar airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->