கேரளா: வழித்தடத்தில் நின்ற ரெயிலில் திடீர் தீ விபத்து.!!
fire accident in train at kerala kannor
கேரளா: வழித்தடத்தில் நின்ற ரெயிலில் திடீர் தீ விபத்து.!!
கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் ரெயில் நிலையத்தில் ஆலப்புழா ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது இந்த ரெயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், ரெயிலின் ஒரு பெட்டி முழுமையாக எரிந்தும், இரண்டு பெட்டிகள் எரிந்து கொண்டும் இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பம் குறித்து ரெயில்வே போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அவர்கள் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்ததாவது, "இந்த தீ விபத்தில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து எப்படி நடைபெற்றது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தீ விபத்து காரணமாக இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து எதுவும் பாதிக்கப்படவில்லை" என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்து சம்பவத்தால் கண்ணூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
fire accident in train at kerala kannor