கேரளா : கொல்லம் அருகே அரசுக்கு சொந்தமான மருந்து கிடங்கில் தீ விபத்து - போலீசார் விசாரணை!!
fire accident in kerala govt medicine gudone kollam
கேரளா : கொல்லம் அருகே அரசுக்கு சொந்தமான மருந்து கிடங்கில் தீ விபத்து - போலீசார் விசாரணை!!
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம் உலியக்கோவில் தேவி கோவிலுக்கு அருகே கேரள மருத்துவ சேவை கழகத்தின் மாவட்ட மருந்துக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில், மருந்துகள் மற்றும் மருந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதைப்பார்த்த பாதுகாப்பு ஊழியர்கள் சம்பவம் குறித்து அப்பகுதி மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்றாலும், கிடங்கின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது.
இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருந்து கிடங்கில் ஏற்பட்ட இந்த தீவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
fire accident in kerala govt medicine gudone kollam