தேசத் தந்தை மோகன் பகவத்! இஸ்லாமிய கூட்டமைப்பு புகழாரம்! - Seithipunal
Seithipunal


நமது மரபணு ஒன்றுதான்! கடவுளை வழிபடும் முறை தான் வேறு!

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாக இந்திய இமாம் அமைப்பு செயல்படுகிறது. உலகின் மிகப்பெரிய இஸ்லாம் அமைப்பாக இந்திய இமாம் அமைப்பு கருதப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக உமர் அகமது இலியாஸ் இருந்து வருகிறார். ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் டெல்லியில் உள்ள அந்த அமைப்பின் மசூதிக்கு சென்றுள்ளார். 

மோகன் பகவத் உடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு இணை செயலாளர் கிருஷ்ண கோபால், பாஜக முன்னாள் அமைப்புச் செயலாளர் ராம் லால் ஆகியோர் மசூதிக்கு சென்றுள்ளனர். இரு தரப்பினரும் சுமார் ஒரு மணி நேரம் மசூதியில் யாரையும் அனுமதிக்காமல் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த ஆலோசனைக்குப் பின் உமர் அகமது இலியாஸ் பேசுகையில் "எங்களது அழைப்பை ஏற்றுக் கொண்டு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அகில இந்திய இமாம் அமைப்பின் அலுவலகத்திற்கு வருகை தந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நமது நாட்டின் தந்தை. நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாஜ்வீதூள் குர்ஆன் மதராசாவை அவர் பார்வையிட்டு அங்கு கல்விப் பயலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். நமது மரபணு ஒன்றுதான் கடவுள் வழிபாடும் முறை தான் வேறு என மோகன் பகவத் கூறியுள்ளார். 

உமர் அகமது இலியாஸின் சகோதரர் சுஹைப் இலியாஸ் பேசுகையில் "எங்கள் தந்தையின் நினைவு தினத்தன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வருகை தந்தது மிகவும் கௌரமாகவும் நாட்டிற்கு இது ஒரு நல்ல செய்தி" என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்திய நாட்டின் மத நல்லிணக்கத்தை அதிகரிக்க இஸ்லாமிய அறிஞர்களுடன் மோகன் ஆலோசனை மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி அலிகள் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் ஜமீர் உத்தின் ஷா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சையத் சிறுவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father of the Nation Mohan Bhagwat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->