மொட்டை மாடியில் தேசியக்கொடி ஏற்ற முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.!
Family host to national Flag on floor electric attack 3 death
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் காங்கே பகுதியில் வசித்து வந்த குடும்பத்தினர், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.
அப்போது விஜய் ஜா என்பவரின் அரிசி ஆலையின் மொட்டை மாடிக்கு அருகில் உயர் அழுத்த மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கம்பத்தின் அருகே, விஜய் ஜாவின் குடும்பத்தினர் தேசிய கொடியை ஏற்ற முயன்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து. இதில் ஆர்த்தி ஜா (வயது 26), புஜா ஜா (வயது 25), வினீத் ஜா (வயது 23) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காங்கே போலீசார், மூன்று பேரின் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காங்கே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரிஜ் கிஷோர் கூறும்போது, "மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வினீத் ஜா மற்றும் பூஜா ஜா ஆகிய இருவரும் விஜய் ஜாவின் குழந்தைகள் ஆவர். உயிரிழந்தவர்களில் மற்றொருவரான ஆர்த்தி ஜா, விஜய் ஜாவின் தம்பி சிவகுமார் ஜாவின் மகள் ஆவார். உயிரிழந்த மூவரும் தங்களது வீட்டின் மொட்டை மாடிக்கு நேற்றிரவு சென்று தேசிய கொடியை ஏற்ற முயன்றனர்.
அப்போது லேசான மழை தூரல் மற்றும் அதிக காற்று வீசியுள்ளது. எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மூவரும் பலியாகினர். இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் என மூன்று பேரும் மின்சாரம் தாக்கி இறந்தனர்" என்றார்.
English Summary
Family host to national Flag on floor electric attack 3 death