புல்வாமா | பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே என்கவுன்டர்..!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மித்ரிகாம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது அப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் கொடுத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Encounter breaks out between terrorists security force in Pulwama


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->