புதுச்சேரியில் மின்சார பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!
Electric bus drivers strike Puducherry
புதுச்சேரியில் மின்சார பேருந்து ஓட்டுநர்கள், தமிழக மின்சார பேருந்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் அளவுகோலுக்கு இணையான ஊதியம் மற்றும் தினப்படி வழங்க வேண்டும் எனக் கோரி இன்று முதல் சேவையை நிறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.23 கோடி செலவில் 25 மின்சார பேருந்துகள் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி இயக்கத்துக்கு வந்தன. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல
வர் ரங்கசாமி இதை தொடங்கி வைத்தனர். புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் சேவை தொடங்கிய இந்த மின்சார பேருந்துகள், பொதுமக்களிடையே விரைவில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
சேவை தொடங்கிய பத்து நாட்களிலேயே, ஊதிய நிரந்தரத்துடன், தினபடி வழங்க வேண்டும் என்பதையும், தமிழகத்தில் உள்ள மின்சார பேருந்து ஊழியர்களுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பதையும் ஓட்டுநர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர்.
இந்த பேருந்துகளுக்கு நிரந்தர அரசு ஓட்டுநர்கள் இல்லாததால், வெளியில் இருந்து தற்காலிக அடிப்படையில் 75 பேரை நியமித்து, அவர்களுக்கு மாதம் 21,000 என்று கூறப்பட்ட நிலையில், பிடித்தம் போன பிறகு 17,000 மட்டுமே வழங்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதிய பேருந்து சேவை தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், ஊதிய பிரச்சினையை முன்னிறுத்தி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது, இந்த சேவையை நம்பி பயணித்துவரும் புதுச்சேரி மக்களுக்கு அதிர்ச்சியையும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Electric bus drivers strike Puducherry