சிறப்பு தீவிர திருத்தம்: பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
Election Commission releases statistics on 65 lakh voters being removed in Bihar
பீஹார் மாநிலத்தில் தீவிர சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பீஹார் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர்கள் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்தி வருகிறது. அதன் பணிகள் அனைத்தும் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இது குறித்த புள்ளி விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 65.2 லட்சம் வாக்காளர்களில் 22 லட்சம் பேர் இறந்து விட்டதாகவும், 35 லட்சம் வாக்காளர்கள் பீஹாரை விட்டு நிரந்தரமாக இடம்பெயர்ந்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 07 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 1.2 லட்சம் பேர் இன்னமும் தங்களது படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில்,99.8 சதவீதம் வாக்காளர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், 7.9 கோடி வாக்காளர்களில் 7.23 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் எனவும், வரைவு வாக்காளர்கள் பட்டியல் ஆகஸ்ட் 01-இல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆகஸ்ட் 01 முதல் செப்டம்பர் 01 வரை அடுத்தக்கட்டத்தின் போது பரிந்துரைக்கப்பட்ட படிவங்களை நிரப்பிய பிறகும், பெயர்கள் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கலாம் என்றும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவது தொடர்பாக கட்சிகள் தங்களின் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யலாம் என்றும் குறித்த புள்ளி விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Election Commission releases statistics on 65 lakh voters being removed in Bihar