என்னோட பெயரைக் காணும் - தேஜஸ்வி யாதவின் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம்.!!
election commission explain thejasvi yadav report
பீகார் மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த அம்மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
வலைத்தளத்தில் EPIC நம்பர் உள்ளீடு செய்து பார்த்தபோது தனது பெயர் வாக்காளர் பட்டியலில் காட்டவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்ததாவது:- "வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தேஜஸ்வி யாதவ் ஒரு விளையாட்டுத்தனமான கூற்றை கூறியிருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் வரிசை எண் 416 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆகவே, வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என்று கூறும் எந்தவொரு கூற்றும் தவறானது மற்றும் உண்மைக்கு மாறானது" என்றுத் தெரிவித்துள்ளது.
English Summary
election commission explain thejasvi yadav report