தபால் வாக்கு எண்ணும் நடைமுறையில் மாற்றம் - தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!
election commission change post vote counting method
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு தொடர்பாக எழுப்பிய குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் மக்களிடம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

இந்த நிலையில், தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணி அனைத்து சுற்று முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தற்போது புதிய நடைமுறையில், வாக்குப்பதிவு இயந்திரத்தின் இறுதிக்கு இரண்டு சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். அதாவது 20 சுற்றுகள் இருந்தால் 18வது சுற்று முடிவில் தபால் வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அடுத்தசுற்று வாக்குகள் எண்ண வேண்டும். நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை கட்டாய மறு சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுக்கும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
election commission change post vote counting method