தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு.!!
election commision order to update voter list in five states
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு.!!
இந்தியாவில் உள்ள மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்று வரும் மிசோரம் மாநிலத்தின் சட்டசபை ஆட்சிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மத்தியபிரதேச உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபை ஆட்சிக்காலமும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் முடிவடைகிறது.

இந்நிலையில் சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள இந்த ஐந்து மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ஐந்து மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், புதிதாக சிறப்பு தொகுப்பு ஆய்வுகளை நடத்தி, வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்தின் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, தகுதிப்படுத்தும் நாளை அடிப்படையாக கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
மேலும், வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி அல்லது அதற்கு முன்பாக பதினெட்டு வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
election commision order to update voter list in five states