விடிய விடிய பெய்த மழை - வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலி.!!
eight peoples died for wall collapse in delhi
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவர்கள் உள்பட எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த இந்த மழையினால் சாஸ்திரி பவன், ஆர்.கே.புரம், மோத்தி பாக், கித்வாய் நகர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில், இன்று டெல்லியில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதால், மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று நாள் முழுவதும் மிதமானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக டெல்லியின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி ஹரி நகர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலியகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
eight peoples died for wall collapse in delhi