டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம்... 4.4ஆக பதிவான ரிக்டர் அளவு...!
Earthquake in Delhi 4point4 Richter scale
டெல்லி மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும், டெல்லியை சுற்றியுள்ள காசியாபாத்,நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணியளவில் நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவானது. இதன் காரணமாக பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கமானது அரியானாவின் குராவாரா பகுதியில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், அது மிகவும் பயமாகவும் வலுவாக இருந்ததாகவும் டெல்லியை சேர்ந்தவர் தெரிவித்தார்.
English Summary
Earthquake in Delhi 4point4 Richter scale