நாளை சூரியனில் இருந்து பூமி உட்சபட்ச தூரத்தை அடைய உள்ளது... (15 கோடியே 20 லட்சத்து, 98 ஆயிரத்து 455 கிலோ மீட்டர்).! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நடைபெறும் நிகழ்வான, சூரியனில் இருந்து பூமி அதிக தூரத்துக்கு செல்லும் நிகழ்வு நாளை நடக்க உள்ளது. இதன் காரணமாக குளிர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதை பெரிஹேலியன் (ஜனவரி 2-ந்தேதி தொடங்கும்) என்று அழைக்கப்படும். சூரியனில் இருந்து பூமி அதிக தூரத்துக்கு செல்லும் நிகழ்வு அல்பெலியன் ஜூலை 6-ந்தேதியும் தொடங்கும். 

சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றது. பூமியின் சுற்று வட்ட பாதை ஒரு சரியான 0.0167 நீள்வட்ட அளவுடன் சிறிது ஓவல் வடிவத்தில் இருக்கும். ஒரு வருடத்தில் சூரியனில் இருந்து பூமி அதன் தொலை தூர நிலைக்கு செல்லும். இது அல்பெலியன் என்று அழைக்கப்படும். 

பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதை பெரிஹேலியன் என்று அழைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6-ந்தேதி அல்பெலியன் நிகழ்வும், ஜனவரி 2-ந்தேதி பெரிஹேலியன் நிகழ்வும் தொடங்கும். 

பூமியில் இருந்து சூரியனுக்கான சராசரி தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர் தூரம். ஆனால், அல்பெலியன் நிகழ்வில் 152 மில்லியன் கிலோ மீட்டர் (15 கோடியே 20 லட்சத்து, 98 ஆயிரத்து 455 கிலோ மீட்டர்) தூரமாக மாறும். இந்த நிலையில் இருக்கும்போது வழக்கத்தை விட குளிர் அதிகம் இருக்கும். 

பின்னர் பெரிஹேலியன் நிலையில் இருக்கும் போது பூமியில் இருந்து சூரியனுக்கான தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டராக இருக்கும். இந்த நிலையில் இருக்கும்போது வழக்கத்தை விட வெப்பம் அதிகம் இருக்கும். 

இந்நிலையில், இந்த ஆண்டு சூரியனில் இருந்து பூமி மிக தொலை தூர புள்ளியான அல்பெலியன் நிலையை நாளை (திங்கட்கிழமை 4-ந்தேதி) அடைய உள்ளது. இது வருகிற ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி முடிவடையும். சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earth farthest sun annual aphelion


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->