டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவை..பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்!
Driverless metro rail service Prime Minister Modi is inaugurating it
மஞ்சள் நிறப்பாதையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையை நாள் துவக்கி பிரதமர் மோடி பெங்களூரு வர இருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூருவில் பசுமை நிறப்பாதையில் உள்ள ஆர்.வி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரையும் ,சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை யிலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்தது. இது டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் பாதை ஆகும். இந்த மஞ்சள் நிறப்பாதையில் நாளை மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.இதற்காக அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு வருகிறார். அவர் மஞ்சள் நிறப்பாதையில் அவர் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி நாளை தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு பெங்களூரு வரும் அவர் அங்கிருந்து நேராக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு சென்று பெங்களூரு-பெலகாவி இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக மஞ்சள் நிறப்பாதையில் உள்ள ராகிகுட்டா மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
அதனை தொடர்ந்து ஜே.பி.நகர் 4-வது பிளாக்கில் இருந்து கடபுகெரே வரையிலான 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் பிரதமர் மோடி பகல் 3 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
English Summary
Driverless metro rail service Prime Minister Modi is inaugurating it