அம்மா, பாட்டியை அடிக்காதீர்கள்!!! சிறுவன் கெஞ்சியும் கேளாத தாய்...!-வீடியோ வெளியீடு அதிர்ச்சி - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்ட கோத்தே கிராமத்தைச் சேர்ந்தவர் குர்பஜன்கவுர். அவரது கணவர் தொடக்கக் கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அதன்பின் குர்பஜன்கவுர் தனது மகனின் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், சொத்துகளை தனது பெயரில் மாற்றித் தர வேண்டும் என மருமகள் ஹர்ஜீத்கவுர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே பல நாட்களாக தகராறு நிலவி வந்தது.மேலும், சம்பவத்தன்று, தகராறு உச்சத்திற்கு சென்ற நிலையில், ஹர்ஜீத்கவுர் தனது மாமியார் குர்பஜன்கவுரை கொடூரமாக தாக்கினார்.

தலைமுடியை பிடித்து இழுத்து, மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளார்.அந்த வேளையில், சிறுவனாகிய அவரது மகன் அதிர்ச்சியடைந்து “அம்மா, பாட்டியை அடிக்காதீர்கள்” என்று கெஞ்சினான். ஆனால் ஹர்ஜீத்கவுர் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக தாக்கினார்.இதனால் வேதனையடைந்த சிறுவன் தன்னுடைய தாயார் பாட்டியை தாக்கும் காட்சிகளை செல்போனில் பதிவு செய்தான்.

அந்த வீடியோ பின்னர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து, “இத்தகைய பெண்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டனர்.

இதுகுறித்து பஞ்சாப் மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, குர்தாஸ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. தற்போது காவலர்கள் சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont hit mom and grandma mother who didnt listen boys plea Video release shocks


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->