ஏமாந்து விடாதீர்கள்...! கடன் தள்ளுபடி என்ற ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம்..! - ரிசர்வ் வங்கி அதிரடி எச்சரிக்கை!
Dont be fooled Dont believe wishful thinking loan waivers Reserve Bank India warning
பொதுமக்களின் நிதி நம்பிக்கையை சுரண்டிவிடும் வகையில் “கடன் தள்ளுபடி” எனும் பெயரில் நடைபெறும் மோசடி பிரசாரங்கள் குறித்து Reserve Bank of India கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்த தேவையில்லை என்று பொய்யான வாக்குறுதிகள் அளித்து, சில மோசடி குழுக்கள் மக்களை வழிதவறச் செய்கின்றன.
மேலும், கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி எந்த அங்கீகாரமும் இல்லாத போலி சான்றிதழ்களை வழங்கி பணம் வசூலிக்கும் செயல்களும் நடைபெற்று வருகின்றன.
“சேவை கட்டணம்”, “சட்டக் கட்டணம்” போன்ற பெயர்களில் கடன் பெற்றவர்களிடமிருந்து தொகைகளை ஏமாற்றி பறிப்பதும் அதிகரித்து வருகிறது.
எனவே, கடன் தள்ளுபடி பெற்றுத் தருவதாகக் கூறும் நபர்கள் அல்லது அங்கீகாரம் பெறாத அமைப்புகளை எந்த சூழலிலும் அணுக வேண்டாம் என்றும், இத்தகைய தவறான வழிகளுக்கு இடம் கொடுக்காமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Dont be fooled Dont believe wishful thinking loan waivers Reserve Bank India warning