உனக்கு ஐ லவ் யூ கேக்குதா!...கடை உரிமையாளரை பளார் பளார் என அறைந்த மாணவிகள்!...வைரலாகும் வீடியோவிற்கு பாராட்டு! - Seithipunal
Seithipunal


முதலில் ஐ லவ் யூ'சொல்லுங்கள், பின்னர் ரீசார்ஜ் செய்கிறேன் என்று கூறிய செல்போன் கடைக்காரரை, மாணவிகள் பளார் பளார் என அறைந்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், திட்வானா-குச்சமான் மாவட்டத்தில் உள்ள குச்சமான் நகரில்  இயங்கி வரும் செல்போன் கடையில், மாணவிகள் சிலர் நேற்று மொபைல் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்வதற்காக அந்த கடைக்கு  சென்றுள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர் மாணவிகளிடம் தவறான நோக்கத்துடன் பேசியதாக கூறப்படுகிறது.

அதாவது மொபைல் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டி கடைக்கு சென்ற மாணவிகளிடம், அந்த கடைக்காரர் முதலில் 'ஐ லவ் யூ' சொல்லுங்கள், பின்னர் ரீசார்ஜ் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், கடை உரிமையாளரை வெளியே இழுத்து வந்து கன்னத்தில் பளார் பளார் என அடித்துள்ளனர்.

பின்னர் அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் கடை உரிமையாளரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.கடை உரிமையாளரை மாணவிகள் அடித்தது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும், மாணவிகளின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you think I love you Students who slapped the shop owner as Plaar Plaar Kudos for the viral video


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->