தமிழகத்தை முந்திய பீகார்...எதில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


புதிதாக திறந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையில் தமிழகத்தை பிஹார் முந்தியுள்ளது.


இந்தியா முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது? என்றும் அதே காலக்கட்டத்தில் எவ்வளவு அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது? என்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சந்தோஷ் குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு  பதிலளித்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:, "கல்வித்துறை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசுப் பள்ளிகளை மூடுவதோ அல்லது திறப்பதோ மாநில அரசின் முடிவு தான்" என்று தெரிவித்துள்ளது .மேலும்  "இந்தியாவில் அதிகப்படியாக மத்திய பிரதேசத்தில் 6,972 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் அதில் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் 2019-20 கல்வியாண்டில் 99,411-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, 2023-24 கல்வியாண்டில் 92,439-ஆக குறைந்துள்ளது" , "இந்தியாவிலேயே அதகிக்கப்படியான அரசுப்பள்ளிகள் திறக்கப்பட்ட மாநிலமாக பிஹார் உள்ளது .

அதுமட்டுமல்லாமல் பிஹாரில் 2019-20 கல்வியாண்டில் 72,610-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, 2023-24 கல்வியாண்டில் 78,120-ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 37,579-ல் இருந்து 37,672-ஆக உயர்ந்துள்ளது.

அதைபோல் மேம்படுத்தப்பட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை  அதிகப்படியாக ராஜஸ்தானில் 541 அரசுப் பள்ளிகளும், குறைந்தபட்சமாக ஆந்திரா மற்றும் புதுவையில் தலா 1 அரசுப் பள்ளியும் மேம்படுத்தப்பட்டுள்ளது" என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், மேம்படுத்தப்பட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை பட்டியலில், தமிழகம் இடம்பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know which was the previous Bihar in Tamil Nadu?


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->