அச்சச்சோ! கொடுத்த ரூ.2000 கடனை திரும்ப கேட்டதால் தகராறு...! விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்...! - Seithipunal
Seithipunal


தலைநகர் புதுடெல்லியில் ஜப்ராபாத் பகுதியை சேர்ந்த இளைஞர் பர்தீன் என்பவர் ரூ. 2000 பணத்தை, அதேபகுதியை சேர்ந்த அடில் என்பவருக்கு கடனாக கொடுத்துள்ளார்.

ஆனால், அடில் அந்த பணத்தை பர்தீனிடம் திரும்பி கொடுக்கவில்லை.இதற்கிடையே, நேற்று அதிகாலை அடில் தனது நண்பர் ஜாவித் உடன் தெருவில் நின்றுகொண்டிருந்தப்போது அங்கு வந்த பர்தீன் கொடுத்த ரூ. 2000 பணத்தை திருப்பி தரும்படி அடிலிடம் கேட்டுள்ளார்.

அப்போது, அடில் மற்றும் பர்தீன்  இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபத்தில் ஆத்திரமடைந்த அடில்,தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பர்தீனை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பர்தீனை மீட்ட அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பர்தீனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், கொலை செய்துவிட்டு தப்பியோடிய அடில் உள்பட 3 பேரை கைது செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dispute arose over a loan of Rs 2000 that was given to him An argument that ended in tragedy


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->