டெல்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அஜரான அனில் அம்பானி...!
Anil Ambani appears Enforcement Directorate headquarters Delhi
கடந்த ஜூலை 24 ஆம் தேதி, பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்க இயக்குநரகம், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் 'அனில் அம்பானி'க்கு சொந்தமான மொத்தம் 50 நிறுவனங்கள், 25 வணிக கூட்டாளர்களின் வீடுகள் மற்றும் அம்பானி குழும நிறுவனங்களின் நிர்வாகிகளின் 35 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் திடீர் சோதனைகளை நடத்தியது.

மேலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த 3 நாள் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில்,இது தொடர்பான விசாரணைக்காக அனில் அம்பானி டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.
இது தற்போது இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த மோசடிக்கு தகுந்த தண்டனை கிடைக்குமா? என்று மக்கள் ஆதங்கத்துடன் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
English Summary
Anil Ambani appears Enforcement Directorate headquarters Delhi