கடும் அமளி! மக்களவையை 2 மணி வரை ஒத்தி வைத்த ஓம் பிர்லா...!
Huge uproar Om Birla adjourns Lok Sabha till 2 pm
கடந்த 21-ந்தேதி பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்கியது.இந்த அவைகளில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாள்தோறும் கடும் அமளியில் களமிறங்குகின்றனர்.

இதைத் தொடர்ந்து, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. இருப்பினும்,மத்திய அரசு தொடர்ந்து பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்து வருகிறது.
இன்று கூட்டம் கூடிய நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி துமளியில் ஈடுபட்டனர்.
இதனால் பாராளுமன்ற நடவடிக்கைகள் தினமும்போல் முடங்கியது.இது பகல் 2 மணி வரை மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
இதில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு,'எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம்' என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Huge uproar Om Birla adjourns Lok Sabha till 2 pm