அதிரடி விமர்சனம்!பிசாசு வேண்டாம்னு பேய் select பண்ணா.. ஐந்து வருஷம் இப்படித்தான்...! - சீமான் தாக்கு
people select devil neglect GHOST Its been like this for five years Seeman
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ''சீமான்'' அவர்கள் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது,அவர் தி.மு.க., அ.தி.மு.க.வை பேய் பிசாசு என குறிப்பிட்டு கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது," பிசாசு வேண்டாம் என்று பேயை 5 ஆண்டுகள் கட்டி கொள்கின்றனர். அ.தி.மு.க. வைத்து தி.மு.க.வை எப்படி ஒழிக்க முடியும்? தீமையை வைத்து மற்றொரு தீமையை அழிக்க முடியாது.
மக்கள் விழித்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும், கூட்டணியால் அல்ல... அண்ணா வழியில் என்று விஜய் தெரிவிக்கிறார்.ஏற்கனவே அண்ணா வழியில் தான் 60 ஆண்டுகளாக தி.மு.க. பயணிக்கிறது.
அண்ணா வழியில் அல்லாமல் வேறு எந்த வழியில் தி.மு.க., அ.தி.மு.க. பயணிக்கிறது.மேலும், அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்?
அப்போவே விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா தற்போது ஏற்பட்டுள்ளது. திரை வெளிச்சத்தில் அடிக்கடி சிலர் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருப்பார்கள்" என்று தெரிவித்தார்.இந்த கருத்து தற்போது ஒரு பூகம்பமாக வெடிக்க உள்ளது.
English Summary
people select devil neglect GHOST Its been like this for five years Seeman