நெஞ்சை பதைபதைக்கும் செய்தி..! உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ள 10 ராணுவ வீரர்கள் நிலை என்ன? மீட்பு பணிகள் தாமதம்..!
What is the condition of the 10 soldiers who were swept away in the Uttarakhand forest flood
உத்தரகாசி அருகே உள்ள தாரல்லியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 04 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், 25 தங்கும் விடுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
தாரல்லி, சுஹி டாப், ஹர்சில் ஆகிய 03 இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியை 150-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அங்கு விரைந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாரல்லியில் ராணுவ வீரர்கள் முகாமில் இருந்தபோது வெள்ளம் சூழ்ந்ததில், காணாமல் போன ராணுவ அதிகாரி, 10 ராணுவ வீரர்களை மீட்புப் படை தேடி வருகிறது. வெள்ளத்தில் சிக்கி ராணுவ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு இன்னும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
What is the condition of the 10 soldiers who were swept away in the Uttarakhand forest flood