'அடுத்த 24 மணி நேரத்தில் கணிசமாக வரி உயர்த்தப்படும்': டிரம்பின் புதிய அறிவிப்பால் அதிர்ந்து போயுள்ள இந்தியா..!
India is shocked by Trump announcement of significant tax hikes in the next 24 hours
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு ஏற்கனவே 25 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கான வரி மேலும் கணிசமாக உயர்த்தப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா தான் அதிகமான வரி விதிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
அத்துடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கு அபாரதமும் விதித்துள்ளார். டிரம்பின் இந்த 25 சதவீத வரி மற்றும் அபராதம் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, டிரம்பை சமாதானப்படுத்தி, அமெரிக்காவுடன் விரைவில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், உலகிலேயே அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியாதான் அதிக வரி விதிக்கிறது. வர்த்தகத்தில் அமெரிக்காவுடன் இந்தியா சிறந்த நண்பராக இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா நம்முடன் அதிகளவில் வணிகம் செய்தாலும் அதே அளவுக்கு வர்த்தகம் செய்யவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே, இந்திய பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் டிரம்ப்பின் புதிய அறிவிப்பால் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது.
English Summary
India is shocked by Trump announcement of significant tax hikes in the next 24 hours