திண்டுக்கல் அருகே வினோதம்: தேவாலயத்தில் ரூ. 100 முதல் ரூ.5,000 வரைக்கும் ஏலம் எடுக்கப்பட்ட குழந்தைகள்..! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் அடுத்த முத்தழகுப்பட்டியில் சுமார் 350 ஆண்டுகள் பழமையான புனித தவஸ்தியர் தேவாலயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நான்கு நாட்கள் இங்கு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 03 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேவாலயத்தில் முக்கிய நிகழ்வாக குழைந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா நேற்று நடைபெற்றது. 

நேத்திக்கடனாக குழைந்தை வரம் வேண்டி ஆலயத்தில் மனம் உருகி வேண்டுதல் வைக்கின்றனர். பின்னர் தம்பதிகளின் வேண்டுதல் நிறைவேறிய உடன் மகிழ்ச்சியுடன் குழைந்தையை ஏலம் விட தேவாலயத்திற்கு கொண்டு வருகின்றனர்.

அதன்படி, இந்த ஏலத்தில் குழந்தைகளின் உறவினர்களே குழந்தை ஏலத்தில் எடுத்து மீண்டும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். ஏலம் விடப்பட்ட குழந்தைகள் 100 ரூ. முதல் 5000 ரூ.  வரை ஏலம் போயுள்ளன. இவ்வாறு குழந்தைகளை ஏலம்  எடுக்க கொடுக்கப்பட்ட தொகையை காணிக்கையாக தேவாலயத்திற்கே வழங்கியுள்ளனர். இன்று புனித தவஸ்தியர் தேவாலயத்தில் ஆடி திருவிழா சப்பர பவனி உடன் நிறைவடையவுள்ளது. 

முத்தழகுபட்டி புனிதசெபஸ்தியார் ஆலய விழாவை முன்னிட்டு திண்டுக்கல் நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதசெபஸ்தியாரை வழிபடுவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Children auctioned off at a church near Dindigul for Rs 100 to Rs 5000


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->