கதறும் தந்தை! மருத்துவ மாணவி தன்னைத்தானே மாய்த்துக் கொண்டு சம்பவம்!
Crying father Medical student commits suicide
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா என்ற மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.இவர் அங்கு 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.(MBBS ) படித்து வந்தார்.

மேலும், இவர் டிபி சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வந்த நிலையில் அவர் அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் தெரிந்த மாணவியின் தந்தை, பணிச்சுமை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பான முழு விவரம் எதுவும் இதுவரை கிடைக்க வில்லை.அதனை தற்கொலை குறித்த காரணத்தை அறிந்துகொள்ள காவலர்கள் தீவிர விசாரணையை செய்து வருகின்றனர்.
English Summary
Crying father Medical student commits suicide