பதவி இல்லாமல் இருக்க முடியாதா..? மம்தாவுக்காக யூசுப் பதானிடம் பதவி விலக சொன்னாரா கங்குலி..? நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


மேற்கு வங்​கத்​தில் மம்தா பானர்​ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்​டுகளாக ஆட்​சியை வீழ்த்தி பாஜக முதல் ​முறை​யாக ஆட்​சியை பிடித்​துள்​ளது. முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். அவர் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.

மம்​தா​ பானர்ஜியின் தோல்​வியை தொடர்ந்து அவரது திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சிக்​குள் மோதல் தீவிரம் அடைந்​துள்​ளது. கட்​சி​யின் அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் சுமார் 60 பேர் ரிதப்​ரதா பானர்ஜி தலை​மை​யில் அணி திரண்டுள்ளனர். 

இதையடுத்து சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வராக ரிதப்​ரதா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது மம்​தாவுக்கு மேலும் அதிர்ச்​சியை  கொடுத்துள்ளது. அக்கட்சியின் 23 எம்.பி-க்கள் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்கள் உடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மம்தா பானர்ஜிக்காக எம்.பி பதவியை ராஜினாமா செய்யுமாறு யூசுப் பதானிடம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை வங்காள மொழி செய்தி நிறுவனம் ஒன்று செய்தியாக வெளியிட்ட நிலையில், இது அம்மாநில அரசியலில் கவனம் பெற்ற்றுள்ளது.

மாநிலத்தில் அதிகாரத்தை இழந்த மம்தாவின் கவனம் மக்களவை பக்கம் திரும்பி உள்ளதாகவும், அதற்காக இஸ்லாமிய மக்கள் அதிகளவில் வசிக்கும் பஹரம்பூர் தொகுதியை அவர் குறிவைத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. 

கடந்த மக்களவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றிப்பெற்றார். இந்நிலையில், அவரது எம்.பி பதவியை மம்தாவுக்காக ராஜினாமா செய்யுமாறு சவுரவ் கங்குலி பேசியதாகவும், அதற்கு யூசுப் பதான் மறுத்துவிட்டதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளஸ்து.

இந்நிலையில், இது குறித்து சவுரவ் கங்குலி விளக்கம் கொடுத்துள் கூறியுள்ளதாவது; ''என் பெயரை தொடர்பு படுத்திய செய்தி கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. யூசுப் பதானை நான் தொடர்பு கொண்டு பேசவில்லை. மம்தா தரப்பில் இருந்தும் என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை'' என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did Ganguly ask Yusuf Pathan to step down for Mamata sake


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->