சேலம் வழித்தடத்தில் ஓடிய தன்பாத்–கோவை எக்ஸ்பிரஸ் ரத்து...! - ரெயில்வே அறிவிப்பு
Dhanbad Coimbatore Express which ran Salem route cancelled Railway announcement
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவையை நோக்கி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த தன்பாத்–கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 03679), சேலம் வழியாக சென்று வந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் நாளை மறுநாள் சனிக்கிழமை முதல், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இயக்கப்படாது.
அதேபோல், கோவையில் இருந்து தன்பாத்துக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் புறப்பட்டு வந்த கோவை–தன்பாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 03680) கூட, வரும் 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் ரத்து அறிவிப்பு பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.
English Summary
Dhanbad Coimbatore Express which ran Salem route cancelled Railway announcement