அன்பும் அமைதியும் நிறையட்டும்...! - வெற்றிப் பொங்கல் வாழ்த்திய விஜய் - Seithipunal
Seithipunal


உழவர்களின் உழைப்பை போற்றும் திருவிழாவாகவும், தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும் விளங்கும் பொங்கல் பண்டிகை, ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாளில் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், நாளை ஜனவரி 16-ஆம் தேதி மாட்டு பொங்கலும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 17-ஆம் தேதி சனிக்கிழமை காணும் பொங்கலும் நடைபெற உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் புதுப்பானையில் பொங்கலிட்டு, குடும்பத்துடன் சேர்ந்து பாரம்பரிய உற்சாகத்தில் திருநாளை கொண்டாடி வருகின்றனர். வீடுகளிலும், தெருக்களிலும் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் காணப்படுகிறது.

இந்த இனிய திருநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்துச் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தவெக தலைவரும் நடிகருமான விஜய் தனது வாழ்த்து செய்தியில், “தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தில், உலகின் எங்கெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.

அனைவருக்கும் வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

May love and peace abound Vijays wishes successful Pongal


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->