அதிகாலை 3.45 மணிக்கு அதிர்ச்சி! மெட்ரோ கட்டுமானத்தில் கிரேன் கவிழ்வு...!
Shock at 3point45 AM Crane collapses at metro construction site
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சில்க் போர்டில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வரை நீல நிறப் பாதையில் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3.45 மணியளவில் அகரா பகுதியில் நடைபெற்று வந்த மெட்ரோ கட்டுமானப் பணியில் திடீர் விபத்து ஒன்று ஏற்பட்டது.அப்போது, ராட்சத கிரேன் ஒன்றின் உதவியுடன் சுமார் 100 டன் எடையுடைய இரும்பு கார்டரை தூக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், கிரேனுடன் இணைக்கப்பட்டிருந்த நான்கு ஜாக்குகளில் ஒன்று திடீரென துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சமநிலையை இழந்த அந்தப் பெரும் கிரேன், கணநேரத்தில் கவிழ்ந்து விழுந்தது.
விபத்தில் கிரேன் வாகனத்தின் முன்பகுதி மேல்நோக்கி தூக்கி நிறுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது.ஆபத்தை உணர்ந்த கிரேன் ஓட்டுநர் உடனடியாக கீழே குதித்து உயிர் தப்பினார். அதிகாலை நேரம் என்பதால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் இருந்ததால், பெரிய அளவிலான உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்த பொறியாளர்கள், இந்த கிரேன் 500 டன் எடை வரை தூக்கும் திறன் கொண்டது என்றும், ஜாக் பழுதடைந்ததே விபத்துக்குக் காரணம் என்றும் தெரிவித்தனர். தகவலறிந்த எச்.எஸ்.ஆர். போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
English Summary
Shock at 3point45 AM Crane collapses at metro construction site