தமிழர் திருநாளில் செழிக்கும் செங்கரும்பு, மகிழ்ச்சி மற்றும் ஒருமை! - வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்,எடப்பாடி,மோடி
Tamil festival day flourishing sugarcane joy and unityGreetings extended by Stalin Edappadi and Modi
இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.அவர் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில் கூறியிருப்பதாவது: “புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கல் செழிக்க, இனித்த செங்கரும்பை சுவைத்து, செங்கதிரோனைப் போற்றும் இந்த #தமிழர்_திருநாள், தமிழர் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் வளர்க்கட்டும்! தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பரப்பும் இந்த பொங்கல் உற்சாகம், திராவிட மாடல் 2.0-இல் பலதரப்பட்ட வெற்றிகளை உருவாக்கும்! அனைவரும் ஒன்றாக வெல்வோம்!” என்று தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழர்களுக்கான இனிய பொங்கல் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.அவர் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில் கூறியிருப்பதாவது: “உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெற்று, சிறப்போடும் சீரோடும் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ‘அம்மா’ ஆகியோரின் தூய வழியை நினைவுகூரி, அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் தனது இனிய வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.அவரது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: “பொங்கல் திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மக்களை ஒன்றிணைக்கும் இந்த திருநாள், சமூகத்தில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் பண்பாட்டுப் பெருமையை வெளிப்படுத்துகிறது. வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மதிப்பையும் நினைவூட்டும் இந்த பண்டிகை, நமது பாரம்பரியத்தின் உயரிய தருணங்களைக் குறிக்கிறது. இந்தப் பொங்கல், உங்கள் இலக்குகளை அடைய புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும். அனைவருக்கும் ஆரோக்கியமும், நலமும், மகிழ்ச்சியும் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.மேலும், பிரதமர் மோடி மற்றொரு பதிவில், “சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவை முன்னிட்டு அண்மையில் நான் சோம்நாத்திற்குச் சென்றபோது, நான் சந்தித்த மக்கள், காசி தமிழ் சங்கம், சௌராஷ்ட்ர தமிழ் சங்கம் போன்ற முயற்சிகளை பாராட்டினார்கள். இன்று சிறப்பான பொங்கல் பண்டிகையின் போது, காசி தமிழ் சங்கத்தின் வளர்ச்சியையும், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை அது எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பதையும் எனது கருத்துக்களுடன் பகிர்ந்துகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil festival day flourishing sugarcane joy and unityGreetings extended by Stalin Edappadi and Modi