#அதிர்ச்சி சம்பவம்: வாடிக்கையாளர் வீட்டு நாயிடமிருந்து தப்பிக்க... 3-வது மாடியிலிருந்து கீழே குதித்த "டெலிவரிபாய்"..! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மணிகொண்டா அருகே பஞ்சவதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் வசித்துவரும் நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் மேத்தை ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் பொருளை டெலிவரி செய்வதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடிக்கு இ-காமர்ஸ் நிறுவனத்தின் டெலிவரிபாய் இலியாஸ்(30) வந்துள்ளார்.

அப்போது அந்த வாடிக்கையாளரின் வீட்டில் இருந்த செல்லப்பிராணி நாய் இலியாசை பார்த்து குரைத்து, கடிக்க வேகமாக ஓடியுள்ளது. நாயின் உரிமையாளர் தனது செல்லப்பிராணியை தடுக்க முயற்சித்தபோதும் நாய் வேகமாக ஓடி வந்ததால் அதிர்ச்சியடைந்த இலியாஸ் நாயிடம் இருந்து தப்பிக்க அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதையடுத்து பலத்த காயமடைந்த இலியாசை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delivery Boy Jumps off 3rd Floor to Escape Pet Dog Attack in Hyderabad


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->