#BREAKING || டெல்லியை உலுக்கிய பாலியல் குற்றச்சாட்டு.. மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!! - Seithipunal
Seithipunal


ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக், தினேஷ் போகட், பஜ்ரங் குனியா மற்றும் சங்க போகட்டு உள்ளிட்ட பலர் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மல்யுத்த வீரர்கள் கடந்த மே 4ம் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசி உள்ளனர். மத்திய அமைச்சரும் உடனான இந்த சந்திப்பு நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்துள்ளது. இந்த சந்திப்பின் போது பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் அமித் ஷாவை சந்தித்தனர்.

இருப்பினும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வராததால் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சுவார்த்தைக்கு வரும்படி மல்யுத்த வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக விசாரணை முடிக்க மத்திய அரசு ஜூன் 15ஆம் தேதி வரை கால அவகாசம் கோரியது. இதனை ஏற்று மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் வரும் ஜூன் 15ஆம் தேதி வரை தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும் மே 28ஆம் தேதி மல்யுத்த வீரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லி காவல்துறை திரும்ப பெற உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உடனான சந்திப்புக்கு பிறகு சாக்ஷி மாலிக் செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Wrestlers protest temporarily withdrawn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->