நீட் தேர்வு விடைத்தாளை திருத்தி மோசடி - மாணவிக்கு அதிரடி உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு விடைத்தாளை திருத்தி மோசடி - மாணவிக்கு அதிரடி உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம்.!

கடந்த ஜூன் மாதம் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது. இந்த நிலையில், ஆந்திராவில் மாணவி ஒருவர் நீட் தேர்வில் தாம் 697 மதிப்பெண் பெற்றதாகவும், ஆனால் இணையதளம் மூலம் விண்ணிப்பிக்க முயன்ற போது, மதிப்பெண் 103 என்று காட்டுவதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், தன்னால் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் தனது விடைத்தாள் நகலை சமர்ப்பித்து, அதில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை மீதும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனு நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்ததையடுத்து, நீதிபதி மாணவியின் அசல் விடைத்தாளை தாக்கல் செய்யுமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார். அதன் படி மாணவியின் தேசிய தேர்வு முகமை அசல் விடைத்தாளை தாக்கல் செய்தது.

அப்போது மாணவி தனது விடைத்தாளில் திருத்தம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைப்பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த நீதிபதி, மாணவிக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

delhi high court fined to student for corrected neet result


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->