டெல்லி செங்கோட்டையில் நுழைந்த வங்கதேசத்தினர் 5 கைது!
Delhi Chenkottai Bangaladeshi
டெல்லி செங்கோட்டை வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றும் பிரதமர் மோடியின் நிகழ்வை மையமாகக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், செங்கோட்டையின் பாதுகாப்பு வளாகத்திற்குள் நுழைய முயன்ற ஐந்து பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும்படி நடந்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்களை உடனடியாக தடுத்து விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
காவல்துறையினர் மேலும் தெரிவித்ததாவது: "அவைந்தும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். வயது 20 முதல் 25 வரை இருக்கும். தில்லியில் கூலி தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள்.
அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது."
இதே நேரத்தில், சுதந்திர தின பாதுகாப்பு பயிற்சிக்காக மறைவில் வைக்கப்பட்ட போலி வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க தவறியதற்காக, டெல்லி காவல்துறையை சேர்ந்த 7 பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
Delhi Chenkottai Bangaladeshi