அவதூறு வழக்கு.. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.!
Defamation case Rahul Gandhi's appeal heard Supreme Court today
அவதூறு வழக்குக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மோடி என்று சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்ககோரி மேல்முறையீட்டு முன்பை தாக்கல் செய்தார்.

இந்த மனு அவசர வழக்காக கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது அப்போது ராகுல் காந்தி தரப்பில் எந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. இந்த சூழலில் தண்டனையை நிறுத்தி வைக்க கூடிய அவர் தாக்கல் செய்த மனு ஜூலை 21ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது.
அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே இந்த அவதூறு வழக்கை பதிவு செய்த குஜராத் எம்எல்ஏ பூர்னேஷ் மோடி அவரது கருத்துக்களை கேட்காமல் இந்த வழக்கில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்ன உச்சநீதிமன்றத்தில் ஓவியர் மனு தாக்கல் செய்துள்ளார்.
English Summary
Defamation case Rahul Gandhi's appeal heard Supreme Court today