" உன்னை கற்பழித்து கொன்னுடுவேன் " - பிரபல நடிகைக்கு பகீர் மிரட்டல்.. கைதான ஆளுங்கட்சி பிரமுகர்.! - Seithipunal
Seithipunal


மராத்தி திரைப்பட நடிகை தீபாளி போஸ்லே (வயது 40). இவர் மும்பையில் உள்ள ஓஷிவாரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில், அங்குள்ள அகமது நகர் மாவட்டத்தில் நடைபெற்ற குடிநீர் பிரச்சனை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், அதே பகுதியை சார்ந்த சிவசேனா கட்சி பிரமுகர் சந்தீப் வாக் (வயது 28) என்பவரை தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். 

இதனையடுத்து மரியாதையை நிமித்தமாக வாலிபர் நடிகையின் அலைபேசியின் எண்ணை பெற்றுக்கொண்ட நிலையில், தேவையில்லாத குறுந்தகவலை அனுப்பி வைத்துள்ளார். மேலும், நடிகைக்கு தொடர்புகொண்டு பேசவும் முயற்சி செய்துள்ளார். இவரது செயல்பாடுகளில் உள்ள மாற்றத்தால், சந்தீப்பின் எண்ணை தீபாளி பிளாக் செய்துள்ளார். தீபாளி அம்மாநில சிவசேனா கட்சியின் ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதியன்று நடிகையை தனது பிறந்தநாள் விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கவே, தனக்கு ரூ.1 இலட்சம் பணம் தந்தால் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளார். இதனால் சந்தீப் நடிகையை அவதூறாக பேசிய நிலையில், கற்பழித்து கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

இதனால் பயந்துபோன நடிகை தீபாளி, தனது சகோதரருக்கு விபரத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதனைக்கேட்ட நடிகையின் சகோதரர் சந்தீப்பிற்கு தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்யவே, நடிகை தீபாளி போதைப்பொருள் விநியோகம் செய்வதாக தவறான தகவலை பரப்பியுள்ளார். இதனை அறிந்த நடிகை தீபாளி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் சந்தீப்பை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deepali Bhosale Actress Threatened to sexual abuse and kill


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal