ஆபத்தான இருமல் மருந்து! குழந்தைகள் பலி,மத்திய அரசு அவசர சுகாதார ஆலோசனை கூட்டம்!
Dangerous cough medicine Children die central government holds emergency health advisory meeting
இருமல் மருந்தில் ஆபத்தான ரசாயனம் கலந்ததால் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பல குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து மத்திய அரசு அவசர ஆலோசனை கூட்டத்தை அழைத்துள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர்கள் காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார்கள்.
இந்த அவசர சந்திப்பில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ள விவகாரங்கள்,"இருமல் மருந்துகளில் ரசாயன கலப்பின் காரணம் மற்றும் பகுத்தறிவு பரிசோதனை,மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு நிலை,குழந்தைகள் பாதுகாப்புக்கான உடனடி நடவடிக்கைகள்".இந்த அவசர ஆலோசனை கூட்டம் நாடு முழுவதும் மருந்து பாதுகாப்பில் புதிய கட்டமைப்பை உருவாக்கும் வாய்ப்பாகும்.
English Summary
Dangerous cough medicine Children die central government holds emergency health advisory meeting