தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 30% உயர்வு; NCRB தரவுகளில் அதிர்ச்சி..!
Crimes Against Women in Tamil Nadu Rise by 30 percentage
2024-ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 30% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகள் குறிப்பிடுகின்றன.
அதன்படி, பாலியல் வன்கொடுமை மற்றும் பின்தொடர்தல் முதல் குடும்ப வன்முறை மற்றும் இணையவழித் துன்புறுத்தல் வரையிலான பல்வேறு பிரிவுகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக NCRB சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தரவுகளின்படி மொத்தமாகப் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 11,363 ஆக உயர்ந்துள்ளது. 2023-இல் இந்த எண்ணிக்கை 8,943 ஆகும். 2024-இல் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிகபட்சமாக கணவர் அல்லது கணவர் வீட்டு உறவினர்களால் இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாக 3,344 வழக்குகள் பதிவாகி உள்ளன. அத்துடன், 419 பாலியல் வன்கொடுமை, 1,911 கடத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 198 ஆக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய அளவில் தமிழகத்தின் குற்ற விகிதம் ஒரு லட்சம் பெண்களுக்கு 29.4 ஆக உள்ளது. இது அதிகபட்சமாக தெலங்கானாவில் 128.6, ஒடிசாவில் 118.3, மற்றும் ஹரியாணாவில் 96.4 ஆக உள்ளது. குஜராத் 22, மணிப்பூர் 12 என சில மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் தமிழகத்தைவிடக் குறைவாககே உள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் 93% வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Crimes Against Women in Tamil Nadu Rise by 30 percentage