பசுவின் சிறுநீர் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது - குஜராத் நீதிபதியின் வியப்பூட்டும் கருத்து.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள தபி மாவட்ட நீதிமன்றத்தில், பசுக்களை சட்ட விரோதமாக கடத்திய வழக்கில் குற்றம் சாட்டபட்ட நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 

இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு அளித்த போது வேறு சில கருத்துக்களையும் தெரிவித்தார். அப்போது, பசுவின் வதையை நிறுத்தினால் பூமியில் உள்ள அனைத்து விதமான பிரச்சினகளும் தீர்ந்து விடும். 

அதுமட்டுமல்லாமல், பசுவின் சாணத்தைக் கொண்டு கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டால் பாதிப்பு அடையாது. அதேபோல், பசுவின் சிறுநீர் தீர்க்க முடியாத பல நோய்களுக்கு அருமருந்தாகவும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

இந்த தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீதிபதியினுடைய இந்த கருத்து மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், இதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் எதுவும் இல்லை, என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cow urine medicine to all health problams gujarat court justice spech


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->