'மணக்கோலத்திற்கு பதில் பிணக்கோலம்'...! - வருங்கால கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல் இளம்பெண் விபரீத முடிவு...!
corpse instead wedding dress Unable bear separation from her future husband young woman takes tragic decision
கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டம் கிதூர் பகுதியை சேர்ந்த ஜெயா நந்தனின் மகள் பிரபல்லாவுக்கும், நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இரு குடும்பங்களும் மகிழ்ச்சியுடன் திருமணத் தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்து அந்த இல்லத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் மணி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட கடுமையான சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் உயிர் பிழைக்க மருத்துவர்களின் போராட்டம் பலனளிக்காமல், மணி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.திருமண கனவுகளோடு எதிர்காலத்தை காத்திருந்த பிரபல்லாவுக்கு இந்த செய்தி மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியது.
மணமேடைக்கு செல்ல வேண்டிய வாழ்க்கை திடீரென துயரத்தின் இருளில் மூழ்கியதால், அவர் ஆழ்ந்த வேதனையில் தவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜெயா நந்தன் குடும்பத்தினர் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த பிரபல்லா மனவேதனையை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரட்டை சோகம் கிதூர் பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது.
English Summary
corpse instead wedding dress Unable bear separation from her future husband young woman takes tragic decision