ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று ஆலோசனை! - Seithipunal
Seithipunal


ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் அனைத்து விதமான தேர்தலையும் ஒரே சமயத்தில் நடத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதற்கான சாத்திய கூறுகளை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவை மத்திய சட்டத்துறை அமைச்சகம் அமைத்தது.

இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்.கே சிங், சுபாஷ் காஷ்யப், ஹரிஷ் சால்வ், சஞ்சய் கோத்த்ரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த குழுவானது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டப்பூர்வ விதிகளின் கீழ் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்தான அனைத்து கட்ட ஆய்வுகளையும் மேற்கொள்ளும். 

நாடு முழுவதும் ஒரே சமயத்தில் அனைத்து விதமான தேர்தகளையும் நடத்தினால் அதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், மனித வளம், தேர்தல் செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை ஆராய உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் பாஜக கூட்டணி கட்சிகள் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எந்தவித அறிகுறியும் இல்லாமல் 5 நாள் நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Consultation under Ramnath Kovind for one nation one election by today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->