மேற்குவங்கத்தில் பதற்றம்; திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்; உட்கட்சிப் பூசல் என்கிறது பாஜக..!
Consecutive Attacks on Trinamool Congress MPs in West Bengal
மேற்கு வங்கத்தில் நேற்று அபிஷேக் பானர்ஜி கார்கள் மற்றும் முட்டைகளால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மற்றுமொரு திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி இன்று தாக்குதலுக்கு உள்ளயுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அங்கு தேர்தலுக்குப் பிறகும் வன்முறை சம்பவங்கள் தொடந்து நடந்து வருகின்றன.
இந்நினையில், தங்கள் தொண்டர்களை ஆளும் பாஜக-வினர் தாக்குவதாக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கூறி வருகின்றனர். அதன்படி, நேற்று சோனர்பூர் பகுதியில் பார்க்கச் சென்ற திரிணாமுல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தாக்குதலுக்கு உள்ளானார்.
இந்நிலையில், தேர்தல் வன்முறை தொடர்பாக கொல்கத்தா சந்திதாலா காவல் நிலையத்துக்குச் சென்ற திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜியை ஒரு கும்பல் தலையில் தாக்கியதில் அவர் காயமடைந்து கீழே விழுந்தமை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அப்போது பாஜகவினர் தான் தாக்கியதாகக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கருத்து கூறியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் கொலைகார ஆட்சி நடப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதே நேரம் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதலுக்கு திரிணாமுல் காங்கிரஸின் உட்கட்சிப் பூசலே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, அந்த தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் முன்னாள் எம்.எல்.ஏ. லவ்லி மொய்த்ராவின் நெருங்கிய உதவியாளர்கள். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமே அபிஷேக் பானர்ஜிக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Consecutive Attacks on Trinamool Congress MPs in West Bengal