நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: சோனியா காந்தி தலைமையில் நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்..!
Congress party meeting to be chaired by Sonia Gandhi on the monsoon session of Parliament the day after tomorrow
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21-ந்தேதி முதல் ஆகஸ்ட் 21-ந் தேதி வரை ஒரு மாதம் நடக்கவுள்ளது. குறித்த கூட்டத்தொடரில் அணுசக்தி துறையில் தனியார் முதலீட்டை எளிதாக்குவது உள்பட பல முக்கிய மசோதாக்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கூட்டத்தொடருக்கான காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை மறுநாள் (15-ந்தேதி) அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் போது பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கோரி வருகிறன்ற நிலையில், இது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.
English Summary
Congress party meeting to be chaired by Sonia Gandhi on the monsoon session of Parliament the day after tomorrow