பேரணியில் காணாமல் போன பைக்.. கலங்கி நின்ற இளைஞர் - புதிய பைக்கை பரிசளித்த ராகுல் காந்தி!
Bike missing from rally Youth left distraught Rahul Gandhi gifted a new bike
பாட்னா: பீகாரில் வாக்காளர்களின் உரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, காங்கிரஸ் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 1 வரை 16 நாள் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ மேற்கொண்டார்.
இந்த யாத்திரையின் போது, ஆகஸ்ட் 27-ஆம் தேதி பீகாரின் தர்பங்காவில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தொண்டர்களுடன் புல்லட் பைக் பேரணி நடத்தினர். அப்பேரணிக்காக பாதுகாப்பு ஊழியர்கள், உள்ளூரில் கிடைக்கும் பைக்குகளை பயன்படுத்தியிருந்தனர்.
அந்த பைக்குகளில், சுபம் என்ற இளைஞரின் பல்சர் 220 மாடல் பைக்கும் அடங்கியது. பேரணி முடிந்ததும் பைக் திருப்பித் தரப்படும் என பாதுகாப்பு ஊழியர்கள் உறுதியளித்திருந்தாலும், பின்னர் அவரது வாகனம் காணாமல் போனது. பிற பைக்குகள் திரும்பிய நிலையில், சுபத்தின் பைக் மட்டும் இல்லாமல் போனதால் அவர் கவலையில் ஆழ்ந்தார்.
இந்த விவகாரம் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது. பின்னர் சுபம் பாட்னாவிற்கு அழைக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நிறைவு விழாவில், ராகுல் காந்தி அவருக்கே உரிய கையால் புதிய பைக்கின் சாவியை வழங்கினார்.அதே பழைய மாடலிலான பைக் பரிசாக கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த சுபம், ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தார்.
English Summary
Bike missing from rally Youth left distraught Rahul Gandhi gifted a new bike